மூதுரை கதைகள்-மானம் உள்ளவரை

ஆவுடைசெல்வம் என்பவர் தென்மாறன் இளவேந்தன் அரசவையில் அமைச்சருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். ஆவுடைசெல்வம் மிகவும் நேர்மையான மனிதர் . சிறந்த ஒழுக்க குணங்களை ஒருங்கே பெற்ற அறிவாளியும் ஆவார். இவரின் பன்முக திறமை, அன்பு,ஒழுக்கம் அதனுடன் சேர்த்த அடக்கம் இதனை மன்னர் தென்மரான் இளவேந்தன் பல முறை பாராட்டியுள்ளார்.

ஆவுடைசெல்வத்தின் மனைவி செண்முகில் பக்கத்துக்கு நாட்டை சேர்த்தவர். இவர்களுக்கு குழந்தை பிறந்த காலத்தில் தன் குழந்தையை பார்க்க சென்று திரும்பி வந்துகொண்டிருந்தார். அரசாங்க உயர் அதிகாரி என்பதால் இவர்க்கு காவலாக இரு காவலர்களும் நியமிக்கப்பட்டு பயணத்தின் போது உடன் இருந்தனர். எதிரி நாட்டு படை வீரர்கள் இவர்களை நோக்கி வருவதை அறிந்த செல்வம் ஒரு காவலரை விரைந்து சென்று மன்னரிடம் தகவலை செல்லுமாறும் இன்னோரு காவலரை மறைந்து கொண்டு தன்னை பின்தொடர சொன்னார்

அரசின் ரகசியங்களை இவரிடம் இருந்து தெரிந்து விடலாம் என்ற எண்ணத்தில் வந்த எதிரி நாட்டு வீரர்கள் செல்வதை கைது செய்து அந்த நாட்டின் தளபதியிடம் அழைத்து சென்றனர். ஆவுடைசெல்வதை பல ஆசைகள் காட்டி ரகசியத்தை கேட்டார் அந்த தளபதி.பல இன்னல்களை அந்த நாட்டு வீரர்கள்  செல்வத்துக்கு தந்தார். எதையும் கண்டு அஞ்சாமல் எதற்கும் தலை வணங்காமல்  தன் நாட்டிற்கும் அரசருக்கும் எந்த தீங்கும் நேர கூடாது என்பதற்காக அனைத்து ரகசியங்களையும் தன்னுள் வைத்து துன்பத்தை மட்டும் அனுபவித்தார். அதற்குள் காவலர்கள் இருவரும் மன்னரிடம் செல்வத்தின் நிலையை தெரிவித்தனர்.

மற்றவர்கள் நாட்டின் ரகசியங்களை பற்றி கவலை பட மன்னரோ செல்வத்தின் நிலை கண்டு வருந்தி அவரை மீட்க ஒரு சிறிய சிறப்பு படையை ஏற்பாடு செய்ததோடு நில்லாமல் மாறு வேடத்தில் படையோடு சென்று செல்வதை மீட்டார். இரு திங்கள் கழிய செல்வம் அரசவைக்கு வர சிறப்பான வரவேற்பு  மற்றும் விருந்தையும் ஏற்பாடு செய்த மன்னர் செல்வதை துணை அமைச்சராகவும் பதவி உயர்வு தந்தார். தன் நிலை மாறாமல் எதற்கும் வளையாமல் தாய் நாட்டை காக்க மானத்தோடு போராடிய செல்வத்திற்கு கிடைத்த பரிசு.

வெண்பா :
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்

பொருள்:

தூண் எப்படி அதிக பாரம் தாங்காமல் வளையாமல் உடையுமோ, அது போல் மானம் போனால் உயிர் வாழ தன்மை கொண்டவர்கள் எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு எந்த காலத்திலும் பணிய மாட்டார்கள்.

Leave a Comment